இலங்கைக்கு சீனா மற்றும் ஒரு பாரிய கடனுதவியை வழங்குகிறது.

இலங்கையின் பாதை அபிவிருத்திக்காக சீனா, பாரிய கடனுதவியாக 500 மில்லியன் டொலர்களை  வழங்கவுள்ளது. நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளின் பாதைகளை அமைப்பதற்கான இரண்டாம் கட்ட கடன் உதவியாக சீனா, 500 மில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கவுள்ளது. இதற்கான அனுமதி கடந்த அமைச்சரவை கூட்டத்தில் பெற்றுக்கொள்ளப்;பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தென்பகுதிக்கு 3,376,160.000 ரூபாவும் வடபகுதிக்கு 401,400,000 ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. இது தொடர்பான உடன்படிக்கை சீன அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.